ஊருக்குள் நுழைந்த யானை - வீடியோ எடுத்து துன்புறுத்திய மக்கள்

Update: 2025-07-25 03:05 GMT

ஒடிசா மாநிலத்தில் ஒரு கிராமத்திற்குள் நுழைந்த யானையை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து துன்புறுத்தியதாக பலரும் கைது செய்யப்பட்டனர். கியோஞ்சர் மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்த யானையை பலரும், போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் துரத்தி துரத்தி யானையை துன்புறுத்தியதாக கூறி பலரையும் அடையாளம் கண்ட மாவட்ட வனத்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்