திட்டத்தை கச்சிதமாக முடித்த தேர்தல் ஆணையம்

Update: 2025-08-26 06:02 GMT

பீகாரில் 99.11% வாக்காளர்களின் ஆவணங்கள் சேகரிப்பு

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையின்கீழ் 99 புள்ளி 11 சதவீத வாக்காளர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகாரில் மொத்தம் 7.24 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் 0.16 சதவீத வாக்காளர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் ஆவணங்கள் சேகரிப்பு முடிந்து விடும் என்றும், ஆவண சரிபார்ப்பு பணி செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் முடிவடைந்து, இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்