Election Commission | Bihar Election | பீகார் சட்டமன்ற தேர்தல் அட்டவணை இன்று வெளியாக வாய்ப்பு
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணை இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜம்மு காஷ்மீரின் பட்காம், நாக்ரோட்டா தொகுதிகள், ராஜஸ்தானின் அன்டா தொகுதி, ஜார்க்கண்டின், காட்ஷிலா உள்ளிட்ட8சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணையும் வெளியிடப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான பார்வையாளர்கள் கூட்டம் இன்று நடைபெற இருப்பதாகவும், நாளைய தினம், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.