குடும்பத்தினரால் சாலையோரம் வீசப்பட்ட மூதாட்டி பலி
மூதாட்டி ஒருவரை அவரது குடும்ப உறுப்பினர்கள் சாலையோரம் போட்டு சென்ற கொடூரம் உத்தர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அயோத்தியில் உள்ள ராம் நகரில் இ-ரிக்ஷாவில் வந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண், மூதாட்டி ஒருவரை நள்ளிரவில் சாலையோரம் கிடத்திவிட்டு சென்றுள்ளனர்.
மோசமான உடல்நிலையில் இருந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூதாட்டி மற்றும் அவரை வீசி சென்றவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.