ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே சாமி ஊர்வலத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஜே சத்தத்தால், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 7 பேர் படுகாயம் அடைந்தனர். பவானிபுரத்தில் கோவில் திருவிழாவை ஒட்டி சாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது திடீரென பழமையான வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிக்கியவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டிஜே சவுண்ட் சிஸ்டத்தில் இருந்து வந்த அதிகளவிலான சத்தம் தான், சுவர் இடிந்ததற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் டிஜே சிஸ்டத்தை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.