Delhi | குடியிருப்பு பகுதியில் திடீரென பற்றி எரிந்த தீ..கருகிய வீடுகள்..பதைபதைக்கும் காட்சி
குடியிருப்பு பகுதியில் பெரும் தீ விபத்து - வீடுகள் சேதம்
டெல்லி கீதா காலனி அருகே குடியிருப்பு பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ராணி கார்டன் பகுதியில் உள்ள வீடுகள் திடீரென தீ பிடித்து எரிந்ததால், கடும் புகை மூட்டம் எழுந்தது. இந்த தீ விபத்தில் பலர் தங்கிருந்த வீடுகள் சேதமடைந்தன. தகவலறிந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.