Delhi Police Patrol | கட்டுப்பாட்டை மீறி சீறிய காவல் ரோந்து வாகனம் - துடிதுடித்து பலியான உயிர்..
டெல்லி தானா மந்திர் மார்க் பகுதியில் காவல் துறை ரோந்து வாகனம் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார். ரோந்து வாகனம் கட்டுப்பாட்டை மீறி சென்றதால் இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என டெல்லி கூடுதல் காவல் துணை ஆணையர் ஹக்மா ராம் தெரிவித்தார். இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய ரோந்து வாகனம், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி சேதமடைந்தது.