டெல்லியில் யார் ஆட்சி..? - வெளியானது கருத்துக் கணிப்பு முடிவுகள்.. மாறிய நிலவரம்
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.என்.டி.டி.வி, டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி, இந்துஸ்தான் டைம்ஸ், பீப்பிள் பலஸ், சாணக்யா ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் நிலையில் இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த கருத்து கணிப்பு முடிவுக்கு ஆம் ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது.