Delhi Car Blast | Singapore | டெல்லி கார் வெடிப்பு சம்பவம்.. சிங்கப்பூரில் இருந்து வந்த சப்போர்ட்
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் இந்தியாவுக்கு உறுதுணையாக நிற்போம் என சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்துக்கு கண்டனத்தைப் பதிவு செய்தார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த விவியன் பாலகிருஷ்ணன், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணடமடைய வேண்டுமென அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், இந்த இக்கட்டான தருணத்தில் இந்தியாவுடன் சிங்கப்பூர் உறுதுணையாக நிற்கும் எனவும் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.