அமர்நாத் யாத்திரை முன்பதிவு - குவிந்த பக்தர்கள்
ஜம்மு-காஷ்மீரில் புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை முன்பதிவுக்காக திரளான பக்தர்கள் குவிந்தனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகையில் பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான யாத்திரை, வரும் 3-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஜம்முவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் வருகை தந்தனர். அமர்நாத் யாத்திரைக்கு ஆன்லைன் மூலமும் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.