காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் ஜாமின் வழங்கி லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாரத் ஜோடோ யாத்திரையின் போது இந்திய ராணுவத்திற்கு எதிராக சர்ச்சைகுரிய கருத்துகளை தெரிவித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது எல்லைச் சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குநர் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக ஜாமின் கோரிய ராகுல்காந்தியின் மனுவை விசாரித்த லக்னோ தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆலோக் வர்மா ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.