வெளியான ஊழல் நாடுகள் லிஸ்ட்... இந்தியா, சீனா, பாக். எந்த இடம்? - யாரும் எதிர்பாரா ஷாக் ரிசல்ட்

Update: 2025-02-16 04:44 GMT

வெளியான ஊழல் நாடுகள் லிஸ்ட்... இந்தியா, சீனா, பாக். எந்த இடம்? - யாரும் எதிர்பாரா ஷாக் ரிசல்ட்

உலகிலேயே ஊழல் அதிகம் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா? இதுபற்றி புவிசார் அரசியல் ஆய்வாளருடன்

சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித் நடத்திய கலந்துரையாடல் இது.

உலக நாடுகளின் ஊழல் லஞ்சம் தொடர்பாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு

நடத்தி பட்டியலை வெளியிட்டு வருகிறது. மொத்தம் 180 நாடுகளுக்கு 0 முதல் 100 வரையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் தரவரிசை பிரிக்கப்படுகிறது.

பூஜியம் என்பது அதிக ஊழல் மிக்க நாடு. 100 மதிப்பெண் என்பது Clean and neat- கறைபடியாத நாடுகள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு இந்தியா 40 மதிப்பெண்களையும், 2023-ம் ஆண்டு 39 மதிப்பெண்களையும் பெற்றிருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில், இந்தியா 38 மதிப்பெண்களை மட்டுமே பெற்று 93 வது இடத்திலிருந்து 96 வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 76-வது இடத்தையும், பாகிஸ்தான் 135-வது இடத்தையும், இலங்கை 121-வது இடத்தையும், வங்கதேசம் 149 வது இடத்தையும் பிடித்துள்ளன. மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 50-க்கும் குறைவான மதிப்பெண்களையே பெற்றுள்ளன.

ஊழல் குறைந்த நாடாக டென்மார்க் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து பின்லாந்து இரண்டாம் இடத்திலும், சிங்கப்பூர் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

பல நாடுகளில் ஊழலுக்கு எதிராக நல்ல மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அதே நேரம் ஊழல் பெருகி வருவதற்கு

குறைந்து வரும் ஜனநாயகம், நிச்சயமற்ற தன்மை,

மனித உரிமை மீறல்கள் முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகள் பற்றி

நிபுணர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகள், சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்