Commenwealth Games | 2030-ஆம் ஆண்டு உலகமே குஜராத்தை நோக்குமா? பிரமாண்டத்துக்கு தயாராகும் இந்தியா
2030ல் காமன் வெல்த் போட்டிகளை நடத்துவதற்கான விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்க, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 2030 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் காமன் வெல்த் போட்டிகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், போட்டியை நடத்த, குஜராத் அரசிற்கு நிதி உதவி வழங்குவதற்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.