Child | Operation | சிறுவனின் வயிற்றுக்குள் கொத்துக்கொத்தாக முடி, ஷூ லேஸ் - அதிர்ந்த மருத்துவர்கள்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனின் வயிற்றில் இருந்து கொத்துக்கொத்தாக முடி, புற்கள் மற்றும் ஷூ லேஸ் ஆகியவற்றை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். சுபம் நிமானா என்ற அந்த சிறுவன். கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் உடல் எடை குறைவு ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிடி ஸ்கேன் மூலம் சிறுவனின் வயிற்றில் கொத்துக்கொத்தாக முடி, நூல் இருப்பது தெரிய வந்ததை அடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அவற்றை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.