கிளைமேக்ஸை நெருங்கும் சாம்பியன்ஸ் டிராபி - செமியில் இந்தியாவுக்கு யார் எதிரி?
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. நடப்பு தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. இன்று வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை அதிகப்படுத்த இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்பதால், இன்றையப் போட்டியில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.