'சாவா' படத்தை நம்பி விடிய விடிய தங்கத்தை சல்லடை போட்டு தேடும் மக்கள் - சினிமாவை மிஞ்சிய காட்சி

Update: 2025-03-08 14:09 GMT

'சாவா' திரைப்படத்தை பார்த்து, மத்திய பிரதேசத்தில் உள்ள ஆசிர்கார் (Asirgarh) கோட்டைக்குள் தங்கம் இருப்பதாக நினைத்து, கிராம மக்கள் தங்க வேட்டை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியில் வெளியான 'சாவா' என்ற திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் கதைப்படி, மராட்டியர்களிடம் இருந்து கைப்பற்றிய தங்கத்தை, பர்ஹான்பூரில் உள்ள ஆசிர்கார் கோட்டைக்குள் முகலாயர்கள் வைத்த‌தாக எண்ணிய அப்பகுதி கிராம மக்கள், இரவு கோட்டையை சுற்றியுள்ள பகுதிக்கு படையெடுத்தனர். அங்கு, தங்கம் கிடைக்குமா என்று, மண்ணை சல்லடை போட்டு சலித்து பார்த்தனர். மாலை 7 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரை தங்க வேட்டை நடந்த நிலையில், போலீசார் வருவதை அறிந்து அவர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். படத்தை பார்த்து, தங்கம் இருப்பதாக வதந்தியை நம்பி, தங்க வேட்டைக்கு சென்று பொதுமக்கள் ஏமாற்றமடைந்த‌து பேசுபொருளாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்