பல வருடங்களாக வளர்ந்த அண்ணன், தங்கை பகை...நிலத்தகராறில் சகோதரியை கொலை செய்த பயங்கரம்
சகோதரிக்காக தன்மானத்த தவிர வேற எத வேணும்னாலும் விட்டுகொடுக்குற அண்ணன நாம பார்த்திருப்போம்.
ஆனா, சகோதரியுடனான நிலத்தகராறுல அவரை கொலை செஞ்சி இருக்காரு ஈவ்விறக்கமில்லாத இந்த கொலைக்கார சகோதரன்...
கையில் வீச்சரிவாளோடு காட்டு விலங்கை வேட்டையாடிவிட்டதை போல வீராப்பாக வெற்றிநடைப்போட்டு செல்கிறாரே ? அவர் கையில் இருப்பதும் ஒன்றும் வேட்டைக்கு இரையான காட்டு விலங்கு கிடையாது. அது ஒரு பெண்ணின் தலை...
கொலை செய்த பெண்ணின் தலையை கையோடு எடுத்து செல்லும் இந்த கொடூரம் நடந்திருப்பது மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள பர்க்னாஸ் மாவட்டத்தில் தான்.
செல்போனில் படம்பிடித்தப்படி பின்னாடியே நடந்து செல்கிறார்களே இதில் ஒருவருக்கு கூடவா போலீஸுக்கு புகாரளிக்க தைரியம் வரவில்லை என்று தவறுதலாக நினைத்துவிட வேண்டாம்,
காரணம், அந்த நபர் தலையோடு நேரடியாக நடந்து சென்றதே காவல்நிலையத்திற்கு தான்.
என்ன நடந்தது என்பதை தெரிந்துக்கொள்ள விசாரணையில் களமிறங்கினோம்.
கொலையாளியின் பெயர் பீமல், மேற்குவங்க மாநிலம் வடக்கு பர்க்னாஸ் மாவட்டத்தில் உள்ள பசந்தி பகுதியை சேர்ந்தவர்.
கடந்த பல வருடங்களாகவே பீமலுக்கும் அவருடைய சகோதரி உறவுமுறை கொண்ட சதி மோண்டதல் என்கிற பெண்ணிற்கும் சொத்து தகராறு நடந்து வந்துள்ளது.
ஊர்க்காரர்களும், உறவினர்களும் பலமுறை பஞ்சாயத்து பேசியும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. இருவரும் உன்னை கொலை செய்து புதைத்துவிடுவேன் என மாறி மாறி கொலை மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சம்பவம் நடந்தன்று வழக்கம்போல பீமலுக்கும், அவருடைய சகோதரி சதி மோண்டலுக்குமிடையே நிலத்தகராறில் வாக்குவாதம் நடந்திருக்கிறது.
ஒருக்கட்டத்தில் காது வலிக்க காட்டுக்கத்து கத்திய சகோதரியின் குரல்வளையை நெரித்த பீமல், அருகிலிருந்த அரிவாளால் அந்த பெண்ணின் தலையை கரகரவென அறுத்து மிக கொடூரமாக கொலை செய்துள்ளார்.
சகோதரியின் உயிர் பிரிந்த பிறகும் பீமலின் கொலைவெறி அடங்கவில்லை, அந்த பெண்ணின் கழுத்தை துண்டாக வெட்டி ஊர்வலமாக எடுத்துச்சென்று காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
நிலத்தகராறில் சகோதரியின் தலையை துண்டாக வெட்டி எடுத்து அதனை ஊர் அறிய எடுத்து சென்ற சம்பவம் மேற்கு மாநிலத்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
நடந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் பீமலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.