லஞ்சம் பெற்ற சார் பதிவாளர்- தர்ணாவில் ஈடுபட்ட சுயேட்சை எம்.எல்.ஏ
புதுச்சேரி பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் சார் பதிவாளர் லஞ்சம் பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் சார் பதிவாளர் ஸ்ரீகாந்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட பதிவாளர் தயாளன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் பெரும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுயேட்சை எம்.எல்.ஏ நேரு தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.