Bihar Election | Maharashtra CM | பீகாரின் அடுத்த CM யார்? மகாராஷ்டிரா பாணியை கையில் எடுக்கும் பாஜக?
மகாராஷ்டிரா பாணி? பீகாரின் அடுத்த முதலமைச்சர் யார்? பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், அங்கு பத்தாவது முறையாக நிதீஷ் குமார் முதலமைச்சராக பதவியேற்பாரா? என்ற விவாதம் எழுந்துள்ளது. இதற்குக் காரணம் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் தேர்தலை சந்திப்பதாக கூறிய பாஜக ஒருபோதும் நிதிஷ்குமார் தான் முதலமைச்சரின் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது பீகாரில் பாஜக தனித்து பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், மகாராஷ்டிரா பாணியில் முதலமைச்சர் நாற்காலி பாஜக வசம் செல்லலாம் என்றும், தற்போது பீகாரின் துணை முதலமைச்சராக இருக்கும் சம்ரத் சௌத்ரி முதலமைச்சராக்கப்படலாம் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. "