Ashwini Vaishnaw | இந்திய தயாரிப்பு மேப் செயலியை பயன்படுத்திய அஸ்வினி வைஷ்ணவ்

Update: 2025-10-13 02:21 GMT

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேப் செயலியை பயன்படுத்துமாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார். சுதேசி பொருட்களை பயன்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், zoho நிறுவனத்தின் அரட்டை செயலி, உலா பிரவுசர் அதிக அளவு டவுன்லோடு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் Map my India நிறுவனத்தின் மேப்பில்ஸ் எனும் மேப் செயலியை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது காரில் பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அஸ்வினி வைஷ்ணவ், பல்வேறு சிறப்பம்சங்களை மேப்பில்ஸ் கொண்டிருப்பதாகவும், அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்