ஆணவத்தில் கார் டிரைவர்.. கார் பானட்டில் ஊசலாடிய உயிர் - அதிர்ச்சி சிசிடிவி

Update: 2025-08-25 04:28 GMT

வாகன ஓட்டியை கார் பான்ட்டில் இழுத்து சென்ற கார் ஓட்டுநர்

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே இளைஞர் ஒருவர் கார் பானட்டில் தொங்கியபடி சென்ற சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாட்டுகரை பகுதியில், இரு சக்கர வாகனத்தின் மீது, கார் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தி, தப்ப முயற்சித்தது. ஆத்திரம் அடைந்த இரு சக்கர வாகன ஓட்டி, காரை தடுத்த நிறுத்த முயற்சித்து, காரின் பானட்டில் தொங்கியுள்ளார். ஆபத்தை உணராத கார் ஓட்டுநரோ, பானட்டில் தொங்கி வந்த இரு சக்கர வாகன ஓட்டியை, காரை வேகமாக இயக்கியபடி தள்ள முயற்சித்தார். இதில் இரு சக்கர வாகன ஓட்டியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்