கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்... பாஜக வேட்பாளர் பரபரப்பு விளக்கம் - டெல்லியில் நடப்பது என்ன?

Update: 2025-01-19 02:20 GMT

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜகவினர் தாக்க முயற்சித்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவால், காரில் பிரச்சாரத்திற்கு சென்ற போது, பாஜக வேட்பாளர் பர்வேஷ் வெர்மாவின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தியதாக கூறியுள்ளது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது கற்களை வீசி தாக்கியதாகவும், அங்கிருந்த உள்ளூர் மக்களுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், பாஜகவினரை மக்கள் விரட்டி அடித்த‌தாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

கெஜ்ரிவாலின் கார் பாஜகவினர் மீது மோதியதாக பாஜக வேட்பாளர் பர்வேஷ் வெர்மா குற்றம் சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியினர் கூறுவது போல், பாஜகவினர் தாக்கவில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே, காலில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜகவினரை, பாஜக வேட்பாளர் பர்வேஷ் வெர்மா சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்