Andhra Govt | ரஜினியின் உற்ற நண்பருக்கு வந்த திடீர் சிக்கல்

Update: 2025-10-08 12:32 GMT

மோகன்பாபு பல்கலைக்கழகத்தை மூட அரசுக்கு பரிந்துரை

திருப்பதியில் உள்ள மோகன் பாபு பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு ஆந்திர மாநில உயர் கல்வி ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மாணவர்களிடம் இருந்து கூடுதலாக 26 கோடியே 17 லட்ச ரூபாய் கட்டணம் வசூலித்தது கண்டறியப்பட்ட நிலையிம் அத்தொகையை திருப்பி வழங்கவும் 15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்து, பொறுப்புகளை அருகிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்திற்கு ஒப்படைக்குமாறு அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதற்கிடையில், மோகன் பாபு பல்கலைக்கழகம் சார்பில் இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்