Allu Business Park | சிக்கலில் மாட்டிய அல்லு அர்ஜுனின் தந்தை - பறந்த நோட்டீஸ்
தயாரிப்பாளரும் புஷ்பா பட புகழ் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார்... ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் 45வது சாலையில் அமைந்துள்ள “Allu Business Park“ வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறப்படும் பென்ட் ஹவுஸ் குறித்து விளக்கம் கேட்டு அல்லு அரவிந்திற்கு ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அங்கு 4 மாடிகளுக்கு மட்டுமே அதிகாரிகள் அனுமதி வழங்கிய நிலையில், அனுமதி பெறாமல் பென்ட் ஹவுஸ் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அல்லு அரவிந்த் பென்ட் ஹவுஸ் இடிக்கப்படாமல் இருக்க வேண்டிய காரணங்களை விரைவில் விளக்க வேண்டும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.