ராகுல் காந்தியை பார்த்து அப்ரிடி சொன்ன வார்த்தை - கொந்தளிக்கும் பாஜக

Update: 2025-09-17 06:29 GMT

ராகுலை பாராட்டிய அப்ரிடி - விளாசிய பாஜக - காங்., பதிலடி

பிரதமர் மோடி தலைமையிலான அரசை விமர்சித்தும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பாராட்டியும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கூறி இருக்கும் கருத்து தற்போது தேசிய அரசியல் களத்தில் விவாத பொருளாகி இருக்கிறது.

அண்மையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சியைப் பிடிப்பதற்காக 'இந்து - இஸ்லாம்' துருப்புச்சீட்டை பயன்படுத்தி வருவதாகவும்,

அவர் தலைமையில் இந்தியா இன்னொரு இஸ்ரேல் ஆக மாறி வருவதாக விமர்சித்துள்ளார்.

மேலும், அவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேர்மறையான மனப்பாங்கு கொண்டவர் என்றும், அவர் பேச்சுவார்த்தைகள் மூலம் உலகத்தோடு ஒத்துழைக்க விரும்புபவர் என்று புகழ்ந்திருந்தார்.

இது பாஜகவினரிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், பாகிஸ்தானின் டார்லிங் ராகுல் காந்தி என்றும் பாகிஸ்தான் மக்கள் ராகுல் காந்தியை தங்களது தலைவராக கூட ஏற்றுக் கொள்வார்கள் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் எதிரிகள் உங்களை பாராட்டுவதில் இருந்தே, உங்கள் விசுவாசம் எங்கே இருக்கிறது என்று இந்திய மக்களுக்கு தெரியும் என பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் சமூக ஊடகத் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது அப்ரிடி உடன் பாஜகவின் அனுராக் தாக்கூர் ஒன்றாக அமர்ந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்