Gpay, Phonepe செய்தால் ரொம்ப ரொம்ப `கம்மி’ - இன்று முதல் மாற்றம்.. மக்களே யூஸ் பண்ணிக்கோங்க

Update: 2025-11-15 09:15 GMT

சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் (Fastag) இல்லாத வாகனங்களின் கட்டண வசூலிப்பில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் ரொக்கமாக சுங்கக் கட்டணம் செலுத்தினால், வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்கு செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், யுபிஐ அல்லது பிற டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால், வழக்கமான கட்டணத்தில் ஒன்றேகால் மடங்கு மட்டுமே வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, சுங்கக் கட்டணம் 100 ரூபாயாக இருந்தால், ஃபாஸ்டாக் இல்லாத வாகனம் ரொக்கமாக 200 ரூபாய் செலுத்த வேண்டும். அதுவே யுபிஐ மூலம் செலுத்தினால், 125 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைத்து, டிஜிட்டல் முறையை ஊக்குவிக்கவே இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டதாக மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்