யூடியூப் சேனல் மோகம் - தோழி வீட்டில் திருடிய பெண் கைது
யூடியூப் சேனல் நடத்தி சம்பாதிக்கும் ஆசையில் கடனாளியான பெண், தனது தோழி வீட்டில் திருடியதால் போலீஸில் சிக்கினார். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த சஞ்சீதா என்பவர், யூடியூபில் சமையல் வீடியோ பதிவு செய்து சம்பாத்தியம் செய்ய நினைத்தார். இதற்காக விலையுயர்ந்த கேமரா வாங்கி, 4 லட்சத்துக்கும் மேல் கடனாளியானார். இந்த நிலையில், கடனை அடைக்க தனது தோழி வீட்டிலேயே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்க நகைகளை திருடியதால் சஞ்சீதா போலீஸில் சிக்கியுள்ளார்.