வீட்டிற்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பு- எதிர்த்து நின்று பூனைகள்
கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள பரப்பனா பகுதியில் வீட்டிற்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பை, அந்த வீட்டில் வளர்க்கப்படும் மூன்று பூனைகள் உள்ளே விடாமல் எதிர்த்து நின்றன. பூனைகள் சுற்றி நின்றாலும் பாம்பு பின்வாங்காமல் சீறிக் கொண்டு அமர்ந்திருந்தது. இந்த காட்சியை வீட்டின் உரிமையாளர் பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.