இந்திய கடற்படையில் இணைந்த எதிரிகளை நடுங்க வைக்கும் சக்தி -வெளியான முக்கிய அறிவிப்பு
இந்திய கடற்படையில் INS உதயகிரி மற்றும் INS தமால் ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் இணைந்து கப்பற்படைக்கு மேலும் வலு சேர்த்துள்ளன.
இந்தியக் கடற்படையின் புதிய யுத்தக் கப்பலான INS உதயகிரி, P-17A stealth frigate வகையைச் சேர்ந்த மூன்றாவது கப்பலாகும். இது கொச்சியில் உள்ள நேவல் ஷிப் யார்டில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. 149 மீட்டர் நீளமும், நவீன ரேடார் தொழில்நுட்பத்துடன் கூடிய இது வான், கடல், கீழ்கடல் தாக்குதல்களை எதிர்க்கும் திறன் கொண்டது. அதேபோல், INS தமால், 125 மீட்டர் நீளமும் 3,900 டன் எடையுடன், 26% இந்திய உற்பத்திப் பாகங்களை கொண்டு ப்ரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை மற்றும் நவீன ரடார் அமைப்புகள் கொண்டது. இரண்டு கப்பல்களும் இந்திய பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய முன்னேற்றமாகும்.