புதுக்கோட்டையில் புதிய முயற்சி ஒடும் வாகனத்தில் யோகா செய்து அசத்திய முதியவர்
சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே முருகேசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் யோகா சாகசம் செய்து காட்டினார். சிறுவயது முதலே யோகா மீது ஆர்வம் கொண்ட இவர் தற்போது புதிய முயற்சியாக இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டும், குளத்தில் உள்ள தண்ணீரில் சில வகையான யோகா முத்திரைகளையும் செய்து காட்டினார்.