தெருநாய்களுக்கு இரையான சிறுவன் - நெஞ்சை பிசையும் பெற்றோர், உறவினர்களின் கதறல்
ஆந்திராவில், தெருநாய்கள் கடித்துக்குதறியதில், 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குண்டூர், ஸ்வர்ண பாரதி நகரில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஐசக் என்ற சிறுவனை, தெருநாய்கள் கழுத்துப் பகுதியில் கடித்துக் குதறியது. இதனால் சிறுவன் அலறிய நிலையில் அங்கிருந்த மக்கள் சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததால், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது, காண்போரை கண்கலங்க வைத்தது.