காதலிக்க மறுத்த 10ம் வகுப்பு மாணவி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இளைஞர்

Update: 2025-07-23 06:03 GMT

சதாரா மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை, 18 வயதான இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவரது காதலை பள்ளி மாணவி ஏற்காமல் மறுத்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்த மாணவியை வழிமறித்து, அவரது கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர், அந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது, இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்