100 rupee bribery case || 40 ஆண்டுகளாக முன்னாள் அரசு ஊழியரை துரத்திய `100 ரூபாய்' தாள்

Update: 2025-09-26 07:34 GMT

சத்தீஸ்கரில் 100 ரூபாய் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து 39 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பணத்தாள்களை மீட்பது மட்டும் லஞ்ச குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமானதாக இருக்காது எனக் கூறிய உயர்நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது. தமது பாக்கெட்டில் வலுக்கட்டாயமாக பணம் வைக்கப்பட்டதாகவும், தாம் லஞ்சம் பெறவில்லை என்றும் மத்தியப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் முன்னாள் பில்லிங் உதவியாளர் ஜாகேஷ்வர் பிரசாத் கூறுகிறார். செய்யாத குற்றத்திற்காக தம்மீது பழி சுமத்தப்பட்டதில் சம்பளம், பென்ஷன், குடும்பம் என வாழ்க்கையில் பலவற்றை தாம் இழந்துவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்