கேரளாவில், அரசு மதுபானக் கடையில்10 வயது சிறுமி மதுபானம் வாங்க வரிசையில் நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலக்காடு மாவட்டம் பட்டாம்பிகரும்பாறை பகுதியில் செயல்படும் மதுக்கடையில், மதுபானம் வாங்க மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அப்போது, அவர்களுடன் 10 வயது சிறுமி மது வாங்க நின்றுள்ளார். அதனை, மதுப்பிரியர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.