உத்தரப்பிரதேசம் ரயில் நிலையத்தில் ஒரு வயது பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் ஒரு வயது பெண் குழந்தை மற்றும் அவரது தாய் உறங்கிக் கொண்டிருந்தனர். குழந்தையின் தாய் கழிவறைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது பெண் குழந்தை அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அங்கு வந்த ஒருவர் பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு ரயிலில் ஏறி சென்றது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் குழந்தையை கடத்திய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.