``காசாவில் உடனடியாக போர் நிறுத்தம்'' - ஐ.நா. வலியுறுத்தல்

Update: 2025-08-22 02:48 GMT

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதல் நீடிக்கும் சூழலில், காசாவில் இதுவரை 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசாவில் ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்ய இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஜப்பானில் ஆப்பிரிக்க வளர்ச்சி குறித்த மாநாட்டில் பங்கேற்ற ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகளைத் தடுக்க, காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை எட்டுவது மிக முக்கியம் என்றும், இந்த விவகாரத்தில் இஸ்ரேல் தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்