காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-08-18 00:48 GMT

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்க, இன்று தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்...

கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் புதிய கட்டடத்தையும் திறந்து வைக்கிறார்...

விவசாய பயன்பாட்டில் அல்லாத இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவு...

மாவட்ட வாரியாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அதிரடி நடவடிக்கை...

கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு...

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

கனமழை எச்சரிக்கை காரணமாக 22 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்...

நிவாரண உதவிகளை தயார் நிலையில் வைக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு...

தமிழகத்தில் குரங்கம்மை தொற்று கண்டறியப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்...

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்... 

Tags:    

மேலும் செய்திகள்