காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டது பாஜக..
மகளிருக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கும் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும் என நிதியமைச்சர் அஜித் பவார் அறிவிப்பு.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சூடுபிடித்தது சிபிஐ விசாரணை..
ஜார்க்கண்டைச் சேர்ந்த தனியார் பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர் கைது..
நீட் வினாத்தாள் கசிவில் பல்லாயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு..
இந்த விவகாரத்தில் அரசோடு மோத விரும்பவில்லை, ஆக்கப்பூர்வ விவாதத்தையே விரும்புவதாகவும் கருத்து..
40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை திமுக கொண்டுவரவில்லை என ஈபிஎஸ் தாக்கு..
ஏழை மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு ஒழியும்வரை அதிமுகவின் குரல் ஒலித்து கொண்டே இருக்கும் என்றும் அறிக்கை..
சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்..
நீட் விவகாரத்தில் தமிழ்நாட்டின் குரல் இந்தியாவின் குரலாக நாடு முழுவதும் எதிரொலிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்..