Today Headlines | காலை 6 மணி தலைப்புச்செய்திகள் (25.09.2025) 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-09-25 00:33 GMT
  • ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது...
  • மருத்துவப் படிப்பில் 5,000 முதுகலை இடங்கள், 5,023 எம்பிபிஎஸ் இடங்களை கூடுதலாக சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • சி.பி.எஸ்.இ. 10 மற்றும்12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது
  • உளுந்து, பச்சைப்பயறுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது...
  • கோவை, நீலகிரியில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
  • 2021, 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது...
  • முப்படை தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது
  • ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய முகமது கட்டாரியா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்...
  • லடாக்கில் ஏற்பட்ட வன்முறைக்கும், காங்கிரசுக்கும் தொடர்பில்லை என போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்
  • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம் அணியை இந்திய அணி வீழ்த்தியது...
  • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன
  • திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது...
  • திருப்பதி பிரம்மோற்சவத்தின் முதல்நாளில் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா சென்றார் 
Tags:    

மேலும் செய்திகள்