இத்தாலியில், விமான நிலைய செக்-இன் பகுதியில் ஒருவர் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மிலன் நகரில் உள்ள மல்பென்சா Malpensa விமான நிலைய செக்-இன் பகுதியில் உள்ள கவுன்ட்டருக்கு ஒருவர் திடீரென தீ வைத்ததால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர்.
சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.