"வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலை சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும்"
வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். திருத்தணி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுக்கத்தவறிய ஆட்சியாளர்களே இதற்கு முக்கிய காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.
நம் இடத்திற்குப் பிழைக்க வந்தவர்களை, நம் வாய்ப்புகளைப் பறித்துக்கொண்டவர்களாகக் கருதும் மோசமான மனநிலை உலகம் முழுவதுமே இருக்கிறது... இதைக் களைவதற்கான ஒரே வழி, மக்களுக்கிடையேயான சகோதரத்துவத்தை வளர்த்தெடுப்பதுதான் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரீல்ஸ் மோகத்தில் வன்முறையை தூண்டுபவர்களை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்".