நடிகர் ரஜினிகாந்த் கரூரை சேர்ந்த தனது ரசிகர்களின் பிள்ளைகள் 3 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளார். கரூர் மாவட்டத்தை சேர்ந்த வைத்தீஸ்வரி, மணிஷா , தர்ஷினி ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான கல்லூரி கட்டணம் ரஜினிகாந்த் பவுண்டேசன் சார்பில் நேரடியாக அவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தபட்டுள்ளது. இதற்கு கரூர் மாவட்ட ரஜினிகாந்த் நற்பணி மன்றம் சார்பில் நன்றி தெரிவித்து கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.