மதுரையில் ஜாக்கி திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்கிற்கு, படத்தில் தங்களுடன் நடித்த கிடாவோடு வருகை தந்த மலையாள நடிகர்கள் யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ் ரசிகர்களுடன் படம் பார்த்து மகிழ்ந்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்த இயக்குநர் பிரகபல் தமிழர்களின் பாரம்பரியமான, கிடா சண்டை பற்றிய கதையை திரைப்படமாக உருவாக்கி உள்ளார். நடிகர்கள் விஜய், அஜித்தின் ரீ ரிலீஸ் படங்கள், புதிய படங்களுக்கு திரையரங்கம் கிடைக்காததற்கு காரணமில்லை என, மதுரையில் ஜாக்கி திரைப்படத்தை பார்த்த மலையாள நடிகர்கள் யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.