Rajinikanth | Bhagyaraj | "ஜெ.,வுக்கு எதிராகபேசியதால் கல் வீச்சு.." "என்னை காப்பாற்றிய பாக்யராஜ்.."

Update: 2026-01-08 16:15 GMT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியதால் சிலர் கற்களை வீசி தாக்கியபோது, அவர்களிடம் இருந்து என்னை காப்பாற்றியவர் பாக்யராஜ் என நடிகர் ரஜினிகாந்த் நினைவுகூர்ந்துள்ளார்.

நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், திரைத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக தனியார் youtube சேனல் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 16 வயதினிலே திரைப்படத்தில் நடித்தபோது, தனக்கு வசன உச்சரிப்பை கற்றுக் கொடுத்தவர் பாக்யராஜ் என்று தெரிவித்தார்.

1995-ஆம் ஆண்டு, செவாலியர் விருது பெற்ற நடிகர் சிவாஜி கணேசனுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை தாம் மேடையில் விமர்சித்த சம்பவத்தை ரஜினிகாந்த் நினைவு கூர்ந்தார்.

ஜெயலலிதாவுக்கு எதிராக தாம் ஆவேசமாக பேசியதால் சிலர் கற்களை வீசி தாக்கியதாகவும்,

அப்போது காவல் துறையினரை அழைத்து தன்னை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தவர் பாக்யராஜ்தான் என்றும் ரஜினி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்