Pawan Kalyan On Thirupparangundram Issue| திருப்பரங்குன்றம் விவகாரத்தை மீண்டும் இழுத்த பவன் கல்யாண்

Update: 2025-12-08 09:15 GMT

சனாதன தர்மம் குருட்டு நம்பிக்கையின் சின்னம் அல்ல... அது மனிதகுலத்திற்கு அறிவியல் பாதையை வழங்கிய ஆன்மீக அறிவியல் என, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்தார்.

சனாதன விவகாரத்தில் யாரும் நம்மைத் தாக்குவதற்கு துணியாதபடி குரல் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தமிழகத்தில் உள்ள இந்துக்கள், தங்களது தர்மத்தை கடைபிடிக்க சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டி இருந்ததாகவும், இதுபோன்ற சூழ்நிலைகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு இந்துவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். சனாதன தர்மம், அரசியலமைப்பு இரண்டும் ஒரே இலக்கை நோக்கி செல்வதாகவும் பவன் கல்யாண் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்