Music Director Deva | "36 வருட இசைப் பயணத்தின் மாபெரும் அங்கீகாரம்.." - இசையமைப்பாளர் தேவா பெருமிதம்
ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் வழங்குன பாராட்டுச் சிறப்பை பெற்றதுல மகிழ்ச்சி அப்பிடினு இசைமைப்பாளர் தேவா தெரிவிச்சு இருக்காரு. ஆஸ்திரேலிய பாராளுமன்றத்துல அவருக்கு உற்சாக மரியாதையோட வரவேற்பு அளிக்கப்பட்டு, ChairPerson-னோட சேர்ல அமர வச்சு அழகு பாத்து இருந்தாங்க. அதோட, பாராளுமன்றக் கோளையும் தேவா கையில கொடுத்து இருந்தாங்க. இது சம்பந்தமா X பதிவுல தேவா, இந்த தருணம் எனக்கு மட்டும் அல்ல. உலகம் முழுவதும் இருக்குற கலை மற்றும் இசையை பரப்பி வரும் ஒவ்வொரு கலைஞருக்குமே பெருமை அப்பிடினு தெரிவிச்சு இருக்காரு. அதோட, தன் அன்பான ரசிகர்கள் கடந்த 36 ஆண்டுகளாக அளிச்ச அன்பும், ஆதரவும் தான் தனது இசைப் பயணத்தின் உண்மையான வலிமை அப்பிடினும், இந்த அங்கீகாரம் ஒவ்வொருவருக்கும் உரியது அப்பிடினும் சொல்லி அவரு மீண்டும் ஒருதடவ நன்றி தெரிவிச்சு இருக்காரு.