விஜய்யவே விஞ்சிய கூட்டம்.. இவ்ளோ Fans-ஆ? - ஏணி போட்டு ஏறி சென்ற விக்ரம்

Update: 2025-03-31 06:48 GMT

கரூரில் உள்ள தனியார் திரையரங்கத்திற்கு வருகை தந்த நடிகர் விக்ரம், போலீஸ் ஜீப்பில் ஏறிச்சென்றதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் திரையரங்கம் ஒன்றில் விக்ரம் நடிப்பில் வெளியான, வீர தீர சூரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திரையரங்கத்திற்கு வந்த நடிகர் விக்ரம், கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டத்தினால், ஓட்டல் ஒன்றின் மாடியில் ஏறி ரசிகர்கள் மத்தியில் பேசினார். பின்னர் பாதுகாப்பு கருதி போலீஸ் ஜீப் மூலமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்