பண்டிகை காலங்களில் பெரிய திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஒத்தி வைக்கப்படுவது இறுதியில் திரையுலகத்தையே பாதிக்கும் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்...
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சல்லியர்கள் திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காத நிலை,
சென்சார் சான்றிதழால் ஜனநாயகன் ஒத்தி வைப்பு, பராசக்திக்கு பல இடங்களில் முன்பதிவுகள் தொடங்கப்படாத நிலை என
இவை அனைத்தும் சினிமாவுக்கு கடினமான காலகட்டம் என்பதை உணர்த்துவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்...
குறைந்த பட்ஜெட் திரைப்படங்களுக்கு திரையரங்குகள் வழங்கப்படாமல் இருப்பது சினிமாவையே கொல்வதற்கு சமம் என்றும்,
சென்சார் வாரியம், தயாரிப்பாளர்கள் மற்றும் நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு காணாவிட்டால்
பண்டிகை காலங்களில் பெரிய திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்படுவது,
இறுதியில் திரையுலகத்தையே பாதிக்கும் எனவும் கார்த்திக் சுப்பராஜ் கவலை தெரிவித்துள்ளார்...
மேலும்,
திரைப்படத் துறையில் உள்ள அனைவரும் ரசிகர் மோதல்கள்,
அரசியல் காரணங்கள், தனிப்பட்ட நோக்கங்கள், வெறுப்பு பிரச்சாரங்கள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்து,
ஒருங்கிணைந்து கலையை காப்பாற்ற, சினிமாவை காப்பாற்ற ஒரு நேர்மறையான முயற்சியில் ஈடுபடுவோம் எனவும் வலியுறுத்தியுள்ளார்......