பிரபல பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர், ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் சுய நினைவின்றி இருந்த நிலையில், அருகாமை குடியிருப்பை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கல்பனா தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அவரது மகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கல்பனா தற்கொலை முயற்சி செய்யவில்லை எனவும், தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரை சாப்பிட்டதில் ஓவர் டோஸ் ஆகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், என் அம்மாவும் அப்பாவும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.. அவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.