Ilayaraja | ஆளுநர் ஆர்.என்.ரவியோடு சேர்ந்து குத்துவிளக்கை ஏற்றி வைத்த இளையராஜா

Update: 2026-01-18 16:29 GMT

தமிழ்நாட்டில் தரமான கல்வி கிடைப்பதில்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி, பொறியியல் கல்வி, பிஎச்டி படிப்பு போன்றவை தரமாக இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஐஐடி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் panIIT Tech4Bharat என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில்அளுநர் ஆர்.என்.ரவி, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வை தொடங்கி வைத்து பேசிய ஆளுநர், இந்திய அளவில் உயர் கல்வி சேருபவர்கள் தமிழகத்தில் அதிகமாக இருந்தாலும், தரமான கல்வி தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்